சமூக சேவைவழி சமய நல்லிணக்கத்தை வளர்க்கும் செயல்திட்டங்களுக்கான தலைமைப் பொறுப்புகளுக்கு, டிசம்பர் 7ஆம் தேதி, 16 முதல் 40 வயது வரையிலான இளம் தலைவர்களை நியமித்தது ‘ஹோப் இனிஷியேட்டிவ்’ கூட்டணி.
அவர்களுக்குப் பதவியேற்புச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார் சிறப்பு விருந்தினரான துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.
ஐந்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ‘ஹோப் இனிஷியேட்டிவ்’ கூட்டணி, 250 விருந்தினர்களோடு நடத்திய நன்கொடை இரவு விருந்தின் ஓர் அங்கமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
Commentaires